சன்னி லியோன் அழுகைக்கு காரணம் என்ன?

 Reason-for-crying-of-Sunny-leone

உலக அளவில் பிரபலமானவர் சன்னி லியோன். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் தற்போது இந்திய சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சித்தரித்து "Karenjit Kaur - The Untold Story Of Sunny Leone" என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ரைசா என்ற பெண் சன்னி லியோன் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை நேற்று இரவு பார்த்த சன்னி லியோன் கதறி அழுதுள்ளார். "என் மனது ஆயிரம் முறை உடைந்திருக்கும். 1000 முறைக்கு மேல் கதறி அழுதேன். அப்போது என் வழியில் செய்த சில விஷயங்கள் நினைத்து வருத்தப்படுகிறேன்" என அவர் கூறியுள்ளார்.தற்போது ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறும் விதத்தில் ட்வீட் செய்து வருகின்றனர்.