'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி

 BhaskarOruRascalNewReleaseDate

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமியும், இவருக்கு ஜோடியாக அமலாபாலும் நடித்துள்ளனர். 'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இப்படம் கடந்த வாரமே ரிலீசாக இருந்து கடைசி நிமிடத்தில் சில காரணங்களால் வெளியாகாமல் போனது. இந்த நிலையில், தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வருகிற மே 17ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.