'சாஹோ' படப்பிடிப்பில் இணைந்தார் அருண் விஜய்

 ArunVijayToJoinInSaago

நடிகர் பிரபாஸ் 'பாகுபலி' படத்தின் பெரும் வெற்றியினையடுத்து தற்போது சுஜீத் இயக்கத்தில் 'சாஹோ' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார்.

அருண் விஜய், எமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் அபுதாபியில் விறுவிறுப்பாக நடந்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது அருண் விஜய் இணைந்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.