மோகன்லால்,சூர்யாவுடன் இணைந்த அல்லு சிரிஷ்

 AlluSirishJoinsWithSuriyaMohanlalFilm

கவண் படத்துக்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில், சூர்யாவுடன் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

கேவ்மிக் யு ஹாரி ஒளிப்பதிவு செய்ய, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார். டெல்லி, ஐதராபாத் மற்றும் லண்டனில் படப்பிடிப்பு நடக்கிறது. லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.