விஜய் 62 டைட்டில் ரிலீஸ்???

 விஜய் 62 டைட்டில் ரிலீஸ்???

`தளபதி 62'வில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். வரலட்சுமி, பிரேம்குமார், யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு, க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படப்பிடிப்பு தளத்தில் விஜயின் கெட்டப், போட்டோஷூட் வீடியோ என படம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அடிக்கடி வெளியாகி ட்ரெண்டாவது ஆன்லைனர்கள் அறிந்ததே. இந்நிலையில் விஜயும், கீர்த்தி சுரேஷும் உள்ள புகைப்படம் ஒன்று தீடீரென வெளியாகி வைரலானது. அந்தப் புகைப்படம் ஹேர் ஸ்டைலிஸ்ட் நிறுவனம் அனுமதி இன்றி சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறது. பின்பு அது பரபரப்பானதும் அப்படம் நீக்கப்பட்டது.

விரைவில் படத்தின் அடுத்த ஷெட்யூலுக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறது `தளபதி 62' டீம். ஜூன் 22ம் தேதி விஜயின் பிறந்தநாள் வருவதால் அன்று படத்தின் தலைப்பு வெளியாகும் என மிகுந்த எதிர்ப்பார்ப்பும் உருவாகியிருக்கிறது. தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது இப்படம்.