விஜய் சேதுபதி : திரிஷா குறித்து பேசியது

 விஜய் சேதுபதி : திரிஷா குறித்து பேசியது

நடிகர் விஜய் சேதுபதி தற்போது ‘96’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, த்ரிஷாவுடன் நடித்த அனுபவம் குறித்து கூறுகையில், ‘‘த்ரிஷா ரொம்பவே நடிப்பை நேசிப்பவர். எந்தவொரு காட்சியாக இருந்தாலும் அதை முழுமையாக உணர்ந்து நடிக்கிறார்.

அவரிடமிருந்து நான் நிறைய விசயங்களை கற்றுக்கொண்டேன். அதிகப்படியான தொழில் பக்தி கொண்டவர் நடிகை த்ரிஷா. ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு ஒருநாள்கூட தாமதமாக வந்ததில்லை. இப்படி தொழில் மீது அவர் வைத்துள்ள மரியாதை காரணமாகத்தான் அவர் 15 ஆண்டுகளாக சினிமாவில் கதாநாயகியாகவே வலம் வருகிறார்’’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.